Thursday, July 31, 2003

நித்திரையில் சிறுநீர்கழிக்கும் சிறு பிள்ளைகளைக் கண்டுள்ளீர்கள் தானே...அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் போதிய சுவாசம் இன்மைதானாம்...இது சுவாசப்பாதை பகுதியாக தடைப்படுவதால் நிகழ்கிறதாம்...( நாக்கு மடிப்படைந்து சுவாசப்பாதையை அடைத்தல் அல்லது கண்டக்கழலை வீக்கங்கள் ) இதை ஆய்வு மூலம் கண்டு இப்போ அதை சீர் செய்யக் கூடிய ஒரு உபகரணத்தையும் அறிமுகம் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாம்...!

பதிந்தது <-குருவிகள்-> at 8:24 am | மறுமொழிகள் | Back to Main

கன்னிப் பெண்கள் பலமான ஆண்களை விரும்ப கொஞ்சம் பாலியல் அனுபவம் உள்ள பெண்கள் பலமான ஆண்களைவிட நலிவான ஆண்களையே அதிகம் விரும்புவதாக கனேடிய பல்கலைகழகக் ஆய்வொன்று கூறுகிறது..இவ்வாய்வு பறவைகளில் சில இனங்களை உதாரணமாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது..! காரணம் பலமான ஆண்கள்கள் பாலியல் செயற்பாடுகளின் போது கடுமையாகவும் பாதிப்பு ஏற்படும் வகையிலும் பெண்களுடன் நடந்து கொள்வதுதானாம்...!

பதிந்தது <-குருவிகள்-> at 8:11 am | மறுமொழிகள் | Back to Main

எதிர் கால நிகழ் கால மனிதர்களுக்கும் மற்றும் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் ஏன் மொத்த பூமிக்குமே ஒரு மகிழ்ச்சிகர செய்தி...30 வருடங்களின் பின் ஓசோன் படலத்தின் (பூமியின் தரை மேற் பரப்பிலிருந்து 35 தொடக்கம் 45 கிலோ மீற்றர் உயரத்தில் உள்ளது) பாதிப்பு குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளை ஆதாரம் காட்டி நியூ சயன்றிஸ்ற் செய்தி தந்துள்ளது..! இதற்கு முக்கிய காரணம் CFC பாவனை குறைக்கப்பட்டுள்ளமையே ஆகும்....இந்த CFC எனும் வாயு நிலைப் பதார்த்தம் குளிர்சாதனப் பெட்டிகள், சிவிறிகள் (Sprayers) என்பனவற்றில் அதிகம் பயன் படுத்தப்பட்டன என்பதும் பின் இது பாவனையிலிருந்து விலக்கப்பட்டு வேறு மாற்றீடுகள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது...!

பதிந்தது <-குருவிகள்-> at 8:01 am | மறுமொழிகள் | Back to Main

Tuesday, July 29, 2003

இறுக்கமாக கழுத்துப்பட்டி (Necktie) அணிதல் கண்ணில் குருதி அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வழிவகுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவொன்று கூறி நிற்கிறது...குறிப்பாக ஆண்களில் Glaucoma (தொடரான கண் சம்பந்தமான நோய்கள்-a group of serious eye diseases) ஏற்பட வழிவகுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..!

பதிந்தது <-குருவிகள்-> at 11:33 am | மறுமொழிகள் | Back to Main

Sunday, July 27, 2003

இந்தியாவில் எயிட்ஸ் நோயாளிகளின் அல்லது தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4.58 மில்லியன்களாம்...அத்துடன் இந் நோய் ஆண்களையே அதிகம் பாதித்துள்ளதாம்...காரணம் தறிகெட்ட பாலியல் தொடர்புகள், போதைப் பொருள் பழக்கவழக்கங்கள் என்பன முக்கியமாக அடங்க மற்றும் சிலவுமாம்....!

நன்றி...நியூ சயன்ரிஸ்ற்.கொம்

பதிந்தது <-குருவிகள்-> at 9:54 am | மறுமொழிகள் | Back to Main

Saturday, July 26, 2003

ஓமோன் குறைபாட்டால் வளர்ச்சிகுன்றி இருக்கும் சிறுவர்களின் எதிர்காலம் சிறக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகளால் வளர்ச்சியை ஊக்கிவிக்கக் கூடிய புதிய வளர்ப்பு ஓமோன் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பதிந்தது <-குருவிகள்-> at 6:15 am | மறுமொழிகள் | Back to Main

Friday, July 25, 2003

வளர்ந்த தலையொட்டிப் பிறந்த ஈரானிய பெண்களில் செய்த பிரித்தல் சத்திர சிகிச்சை தோல்வி... அதேவேளை முதுகொட்டிப் பிறந்த தென் கொரிய குழந்தைகளின் பிரிப்பு முயற்சி வெற்றி...இரண்டும் சிங்கப்பூரிலேயே நிகழ்த்தப்பட்டன...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:58 am | மறுமொழிகள் | Back to Main

Thursday, July 24, 2003

செவ்வாய் நோக்கிய பயணங்கள்..1

செவ்வாயை நோக்கிய பயணத்தின் தகவல்கள் தொடரும்...அதுவரை உங்களுக்கு பல விஞ்ஞானத் தகவல்கள் உடனுக்குடன் தரப்படும்... காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள்...

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:19 am | மறுமொழிகள் | Back to Main

அமெரிக்காவும் பிரித்தானியாவும் செவ்வாயை நோக்கி தமது றோவர்களை (றோபோ) கடந்த மாதத்திலும் இம்மாதத்திலும் என்று அனுப்பி வைத்துள்ளன..!

பதிந்தது <-குருவிகள்-> at 9:01 am | மறுமொழிகள் | Back to Main