Thursday, May 16, 2013

உயிர்ப்பிரதியாக்க மருத்துவம்; புதிய தொழில்நுட்பம் சவால்களை எதிர்கொள்ளுமா..?!

130515173248_human_embryo_464x261_spl_no
[கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.]

இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர்.
அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.

மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக் கலங்களாக உருவாவதற்காக மின்சாரத்தின் உதவியுடன் தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் குருத்துக்கலங்கள் மனித உடலில் இருக்கக் கூடிய ஏனைய அனைத்து வகைக் கலங்களாகவும் மாற்றப்படக் கூடியவையாகும்.

இதயம், மூளை மற்றும் எலும்புக் கலங்களாகவும் அவை மாற்றப்படலாம். சேதமடைந்த தசைகளை பழுதுபார்க்கவும், நோய்களைக் குணமாக்கவும் இந்த கலங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்தச் சோதனைகளுக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள்.


மருத்துவ ரீதியில் இந்த முறை முளையக் கல விருத்தி.. பல அனுகூலங்களைத் தந்தாலும்.. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மனித உயிர் உருவாக்கி... பின்னர் அழிக்கப்படுகிறது....என்ற உண்மையும் இதன் பின்னால்.. பதிந்து போயுள்ளது..!

டொலி என்ற ஆடு உருவாக்கப்பட்ட முறை. இதனை adult cell cloning என்று அழைப்பார்கள்.

cloning-sheep.gif

70110-004-420D4C4C.jpg


இதில் இன்னொரு விடயம் என்னவென்றால்.. டொலி இயற்கையாகப் பிறக்கும் ஆடுகளை விட குறைந்த காலமே (கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) உயிர் வாழ்ந்துள்ளது. அது இறக்கும் போது அதற்கு முதுமையில் ஏற்படும் வியாதிகள் அநேகம் இனங்காணப்பட்டுள்ளன. முதிர்ந்த உடற்கலத்தில் இருந்து பெறப்படும் டி என் ஏ கொண்ட கருக்களைப் பயன்படுத்தும் போது.. அதில் இருந்து தோன்றும் இழையங்கள்.. எந்தளவுக்கு இயற்கையான இளமையான இழையங்களுக்கு வயதொத்ததாக (காலமொத்ததாக) இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது..!!

இந்த ஆராய்ச்சியில் இது ஒரு தொடக்கப் புள்ளி தான். இந்தப் பாதையில்.. மனித இனம் கடக்க வேண்டிய மைல் கற்கள் பல உள்ளன.

இதன் மூலம்.. கடவுளை எல்லாம் குளோனிங் செய்ய முடியாது. அதுக்கு அறிவியல் இன்னும்.. நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இது உண்மையில் ஒரு வகை.. cell repair. இயற்கையில் உள்ளதை தொழில்நுட்பத்தைப் பாவித்து அங்கும் இங்கும் அகற்றி இடமாற்றி விடுதல்.. அதையே செய்கிறார்கள்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:30 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க