Wednesday, September 24, 2014

முதல் முயற்சியிலேயே செவ்வாயில் விண்கலத்தை நிறுத்தியது இந்தியா.

பெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய சகாப்தத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது.

இன்று (24-09-2014) காலை 8 மணியளவில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் நுழைந்ததை உறுதிப்படுத்தும் செய்தி இஸ்ரோவை வந்தடைந்தது.

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து மங்கள்யான் செவ்வாயின் நிழலை எட்டிப் பிடித்துள்ளது இந்திய மக்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

24-mars-orbitar-mission34-600.jpg

இன்று காலை நாலே கால் மணியிலிருந்து மங்கள்யானை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணிகள் பெங்களூர் அருகே உள்ள புவிக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடங்கின.

காலை ஏழேகால் மணியளவில் விண்கலத்தின் அனைத்து என்ஜின்களும் வெற்றிகரமாக இயக்கப்பட்டன. இந்த வேலைகள் எழே முக்கால் மணியளவில் முடிவடைந்து வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான். இது எட்டு மணியளவில் உறுதிப்படுத்தப்பட்டது.

உறுதிப்படுத்தும் செய்தி வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்தில் கைதட்டிட வரவேற்று மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை பிரதமர் மோடி நேரில் பார்த்து மகிழ்ந்தார்.

Indian Space Research Organisation scientists watch screens display the graphics explaining Mars Orbiter Mission

முதல் ஆசிய நாடு

செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது. மேலும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த 4வது நாடும் இந்தியா. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய வி்ண்வெளி அமைப்புகள் மட்டுமே செவ்வாயை எட்டிப் பிடித்தவையாகும். அந்த வரிசையில் தற்போது இந்தியா இணைந்துள்ளது.

உலகின் நான்கு இடங்களில்

மங்கள்யானின் செயல்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் இஸ்ரோ கண்காணித்தது. மேலும் அமெரிக்காவின் நாசா அமைப்பும் மங்கள்யான் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாடு

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி முதல் எடுப்பிலேயே அதில் வெற்றி பெற்ற நாடுகள் வரிசையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது. இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட 51 திட்டங்களில் வெறும் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

MOM

மிக மலிவான திட்டம்

கோள்களுக்கிடையேயான விண்வெளிப் பயணத்தில் இதுவரை காலம் நிகழ்த்தப்பட்ட பயணங்களில் மிக மலிவான விலையில் நிகழ்த்தப்பட்ட பயணமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இத்திட்டம் சுமார் 4.5 பில்லியன் ரூபாய்கள் செலவில் நிகழ்த்தப்பட்டிருந்தது.

மங்கல்யான் பணிகள்

செவ்வாயின் சுற்றுப்பாதையை வெற்றிக்கரமாக அடைந்துள்ள மங்கல்யான் அங்கிருந்து கொண்டு செவ்வாயின் காலநிலை, வாயுமண்டலம் மற்றும் அதன் மேற்பரப்பு பற்றி ஆய்வுகளில் ஈடுபடுவதோடு படங்களையும் எடுத்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட இயக்குநராக தமிழர்

மங்கல்யான் திட்டத்தை வடிவமைத்து சாதித்த திட்ட இயக்குநராக தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா அருணன் விளங்குகிறார்.

நன்றி தற்ஸ் தமிழ் + குருவிகள்.

மேலதிக தகவல்கள் இங்கு: ஆங்கிலம்.. பிபிசி.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:10 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

thanks kuruvi

Wed Sept 24, 11:09:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க