Friday, September 26, 2014

செவ்வாயில் குழிதோண்டி முடித்தது கியுரியாசிட்டி.

அமெரிக்க நாசா நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்பி வைத்த தானியங்கி ரோபோவான கியுரியாசிட்டி (Curiosity) செவ்வாய் மேற்பரப்பில்.. சதுப்பு பாறைகள் நடுவே ஓர் இடத்தில் (Mount Sharp in Gale Crater இன் அடிப்பாகத்தில்) குறிப்பிடத்தக்க ஆழத்திற்கு வெற்றிகரமாக குழிதோண்டி உள்ளது. இது இப்பணியை கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்கள் எடுத்து நிறைவு செய்துள்ளது.

Drill hole

[கியுரியாசிட்டி தோண்டிய குழி]

இந்தக் குழியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை.. செவ்வாயின் மண் படைகளை.. கியுரியாசிட்டி மூலம் ஆய்வு செய்து.. பெறப்படும் பெறுபேறுகளை வைத்து செவ்வாயின் கடந்த கால சூழலியல் வரலாற்றை எதிர்வுகூற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஒரு தொன் எடையுள்ள கியுரியாசிட்டி நாசாவால் செவ்வாய்க்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Curiosity image of rocks

இதேவேளை செவ்வாயை அண்மித்து சுற்றிவரும் இந்தியாவின் 1,350 கிலோ எடையுள்ள செயற்கைகோளான மங்கல்யான் அது கொண்டுள்ள 5 ஆய்வுக் கருவிகளில் தற்போது அதன் கமராவை இயங்கச் செய்து செவ்வாய் மேற்பரப்பை சுமார் 7,300 கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்து படம்பிடித்து அனுப்பி உள்ளது. மங்கல்யான் 10 மாதங்கள்.. சுமார் 200 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணம் செய்து அண்மையில் செவ்வாயை அண்மித்து சுற்றத் தொடங்கி இருப்பது குறிப்பித்தக்கது.

Picture of Mars by Indian orbiter, 25 September

[மங்கல்யான் எடுத்து அனுப்பிய செவ்வாயின் மேற்பரப்பு தோற்றப் படம்]

செய்தி மூலம் + மற்றும் மேலதிக செய்திகள் இங்கு கீழ் உள்ள இணைப்புகளில்.

http://www.bbc.co.uk/news/science-environment-29361606

http://www.bbc.co.uk/news/world-asia-india-29357438

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:15 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க