Saturday, September 27, 2014

உயிரின அடிப்படை மூலக்கூறு அண்டவெளியில் கண்டுபிடிப்பு.


 Alma telescope

பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் காபன் இரசாயன உயிரினங்கள் என்றால் மிகையல்ல. மனிதர்கள் எமது உடல் கூட காபனை அடிப்படையாகக் கொண்ட சங்கிலி மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

சிலியில் உள்ள விண்வெளி அவதான மையத்தில் உள்ள ரெடியோ மின்னலை உணர் கருவிகளின் உதவி கொண்டு ஐசோ புரப்பைல் சயனைட் (Iso-propyl cyanide) என்ற காபன் சங்கிலி கொண்ட சேதன மூலக்கூறு.. அகிலம் (galaxy) ஒன்றின் நட்சத்திரங்களை உருவாக்கவல்ல.. விண்வெளி தூசுகள் மத்தியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாம்.

இந்த அகிலம் பூமியில் இருந்து சுமார் 27,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Molecule model

[ஐசோ புரப்பைல் சயனைட் (Iso-propyl cyanide)]

இந்த மூலக்கூறு கண்டறியப்பட்டதானது.. உயிரின அடிப்படை சேதன மூலக்கூறுகள் (புரத அடிப்படை மூலக்கூறுகளான அமினோஅமிலங்கள் கூட) விண்வெளி எங்கும் பரந்திருப்பதற்கான சாத்தியத்தை கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Alma graphic

[சிலியில் உள்ள விண்வெளி அவதான மையம்]

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:32 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க