Tuesday, October 07, 2014

2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியல் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு விபரம்.

 John O'Keefe

2014 இல் மூவர் மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில்.. அதில் அரைவாசியை வென்ற.. இலண்டனில் வசிக்கும் பேராசிரியர் John O'Keefe ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி இதோ.

Laboratory mice

2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசு மூளையில் உள்ள GPS.. திசைகாட்டிக் கலங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்ததை இட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலங்கள் சுண்டெலிகளில்.. 1971 இலேயே கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலங்களின் செயற்பாட்டை சரியாக விளங்கிக் கொள்வதன் வாயிலாக அல்சிமர்.. டெம்ன்சியா(Dementia) போன்ற மூளை நரம்பியல் நோய்களுக்கு தீர்வு தேட வசதிகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது.




மேலதிக தகவல் இங்கு. 



அதேவேளை இயற்பியல் அல்லது பெளதீகவியலுக்கான 2014 நோபல் பரிசு நீல ஒளிகாழும் இருவாயி (BLUE LED) கண்டுபிடிக்கப்பட்டமைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தப் பரிசில் இரண்டு ஜப்பானிய மற்றும் ஒரு அமெரிக்க பேராசிரியர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவாயிகள் இன்று சிமாட்போன்கள்.. மற்றும் எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் சக்தி சேமிப்பு மின்குமிழ்களில் பாவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு 1990 களின் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தது. ஏலவே சிவப்பு.. மற்றும் பச்சை நிற எல் ஈ டிக்கள் கண்டறியப்பட்டிருந்த போதும்.. நீலம் கண்டுபிடிக்கப்படுவதில் தாமதம் நிலவியது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:44 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க