Saturday, October 04, 2014

உலகில் கருப்பை மாற்று சிகிச்சையின் பின் பிறந்த முதல் குழந்தை.


Doctors in Sweden perform a womb transplant. Photo: April 2014

36 வயதான சுவீடன் நாட்டுப் பெண்மணி.. அவருக்கு வேறோரு.. குடும்ப நண்பரான 60 வயதுடைய பெண்மணியில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

உலகிலேயே.. கருப்பை மாற்று சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதலாவது குழந்தையாக இக்குழந்தை நோக்கப்படுகிறது.

குழந்தை சரியான கால அளவுக்கு முன்னர் பிறந்திருந்தாலும்.. 1.8 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தந்தையும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ உலகில் இது ஒரு மகத்தான சாதனையாக மட்டுமன்றி.. இன்னொரு புதிய அத்தியாயமாகவும் நோக்கப்படுகிறது.

பொதுவாக பெண்களுக்கு பிறப்பின் போதான பிறழ்வுகளாலும்.. புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையின் தீவிரத்தாலும்.. கருப்பை இழப்பு அதிகம் ஏற்படுகிறது.மேற்படி பெண் பிறப்பின் போதே கருப்பை இன்றி பிறந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு: First womb-transplant baby born

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:19 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க