Wednesday, June 24, 2015

உடம்பை பிதுக்கிக்காட்டிற உடுப்புப் போட்டால் ஆபத்து; அவுஸி மருத்துவர்கள் எச்சரிக்கை.

skinny jeans

பொதுவாக பெண்கள் தங்கள் உடம்பை பிதுக்கிக்காட்ட ஸ்கின்னி ஜீன்ஸ் போடுவது வழக்கம். இப்போ அதுவே அவங்களுக்கு ஆபத்தாக வந்து சேர்ந்துள்ளது. ஸ்கின்னி (skinny) ஜீன்ஸ் போடுவதால்.. கொம்பாட்மென்ட் சின்றோம் (Compartment syndrome) எனும் நிலைமை ஏற்படுகிறது.

இது தசைநார்களிடையே இரத்தக் கசிவை ஏற்படுத்தி.. வலி.. வீக்கம்.. தசைசெயலிழப்பு வரை உபாதைகளை ஏற்படுத்துவதாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின் அறிவித்துள்ளனர்.

இந்தப் பாதிப்புக் கண்ட பெண்கள்.. சரிவர நடக்க முடியாமல் தடக்கி விழுவது.. எழும்ப இயலாமை.. வலி போன்ற நோய் தாக்கங்களை அனுபவிக்க நேரிடும்.

இப்ப எங்கட தமிழ் ஆன்ரிமாரும்.. தங்கட சள்ளைத் தசைகளை தூக்கி நிறுத்த ஸ்கின்னி ஜீன்ஸ் போடினம் கண்டியளோ. சேலைக்கு எப்பவும் ஒரு மதிப்பிருக்குது.. இன்று வரை அது இப்படியான பிரச்சனைகளை உருவாக்கியதாக இல்லை.

மேலதிக தகவல் இங்கு.
 

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:29 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க